Sunday, February 8, 2015

வணக்கம் இணையவாசிளே.. !

இப்பொழுதெல்லாம், ஒரு திரைப்படம் வெளியாகிவிட்டது என்றால், படம் வெளியான அடுத்த ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்குள், அந்த படத்தின் ரிவியூவ் யூ-டியூபில் வந்துவிடுகிறது. இப்படியான காரியங்களில் ஈடுபடுவர்கள் ஒன்றிரண்டு பேர்கள் தான். அதிலும், கொடுமை என்னவென்றால், ரிவியூவ் செய்கிறேன் என்ற பெயரில் மூன்று மணிநேர படத்தின் கதையை வெறும் மூன்று நிமிட வீடியோவில் சொல்லி விடுகிறார்கள் என்பது கசப்பான உண்மை. யாரோ ஒருவர் கதை எழுதி, யாரோ ஒருவர் கோடி கோடியாய் பணத்தை கொட்டி, இயக்குனர்,நடிகர்,நடிகை,குணச்சித்திர நடிகர்கள்,மேக்கப்மேன்,லைட்மென்,போஸ்டர் ஓட்டும் நபர் என்று மிகபெரிய குழுவாய் உழைத்து, உருவாக்கி, வெளியிடும் ஒரு திரைப்படத்தை வெறும் ஆறு அல்லது எட்டு நிமிட வீடியோவில் தகர்த்து விடுகிறார்கள் என்பது கவலையான விஷயம். ஒரு படத்தை பற்றி விமர்சனம் கூற அத்திரைப்படத்தை பார்த்த ஒவ்வொரு நபருக்கும் உரிமை உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எனினும், பொதுவாக உலகளாவிய சமூக வலைதளங்களில் இப்படியான மோசமான விமர்சனங்களை வெளியிடுவது என்பது அப்படத்தின் வசூலை பெரிய அளவில் பாதிப்படைய செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை. இதனால், இப்படத்தை கஷ்டப்பட்டு உருவாக்கியவர்களின் நிலைமையை ஒரு நிமிடம் அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இப்படியான, விமர்சனங்களை வெளியிடும் நபர்களை பற்றி நமது வலைதள நண்பர் ஒருவர் அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 இந்த நண்பரின் முயற்சிக்கு !ndiaNewz சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!